True

சென்னை காவல் ஆணையரகத்தில் தானியங்கி கை கழுவும் இயந்திரத்தின் பயன்பாட்டைத் தொடக்கிவைத்தார் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அவர்கள் ...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அவர்கள், சென்னையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகளுக்கு உத்தரவிட்டு, அவற்றை சரியான முறையில் செயல்படுத்தியும் வருகிறார். பெருநகர மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5-5-2020 அன்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் தானியங்கி கை கழுவும் இயந்திரத்தின் பயன்பாட்டைத் தொடக்கிவைத்தார். 

அங்கு பணிபுரியும் காவல் அமைச்சுப் பணியாளர்கள், காவல் ஆணையரகத்திற்கு வருகைதரும்  காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்தத் தானியங்கி இயந்திரத்தின் மூலம் கைகளை சுத்தம் செய்துகொண்டு அலுவலகத்திற்குள் நுழையலாம். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், கை கழுவும் தானியங்கி இயந்திரத்தை நிறுவ உதவிய Young Indian’s C.I.I., Rajasthan Cosmo Club, Diva and Thukral Foundation  தன்னார்வ அமைப்பினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஹெச்.எம்.ஜெயராம் இ.கா.ப., நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு இ.கா.ப., எம்.சுதாகர் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கை கழுவுவோம் கொரோனாவை!

Previous
Next Post »