True

Eventsஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது...

அருப்புக்கோட்டை நகர்காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக துப்புரவு தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் முன் அருப்புக்கோட்டை வாழ் மக்களின் நலன் கருதி தன்னலம் கருதாமல் தூய்மை பணியில் ஈடுபடும் தாங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்படுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார்.மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆய்வாளர் பாலமுருகன்அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும்  நன்றி தெரிவித்தார்.
Previous
Next Post »