True

திருப்பூர்காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் மனித நேய வார விழா

திருப்பூர்காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் மனித நேய வார விழா

திருப்பூர் மாவட்டத்தில் 25.01.2019 தமிழ்நாடு காவல்துறை சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் மனித நேய வார விழா பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.கயல்விழி.இ.கா.பஅவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த மனித நேய வார விழா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த கண்காணிப்பு மற்றும் விழிக்கண் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பல்லடம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் .P. முத்துசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பல்லடம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் .S. தேவிM.com.,M.B.A.,M.Phil.,B.Ed.,Ph.D.,அவர்கள் கருத்துரை வழங்கினார்.பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் .கரைப்புதூர்.B நடராஜ்.BA.MLA., அவர்கள்  முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியின்போது கல்லூரி மாணவ மாணவியரின் சிறப்பு பேச்சாற்றல், கவிதை மற்றும் சிறு குறு நாடகங்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் .V.S. கலிவரதன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Previous
Next Post »