பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (2012)குறித்து பயிற்சி முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் ஒரு நாள் பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு இன்று (28-1-2019 )சமூக பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் அழகு சார்பில் இளைஞர் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் ஒரு நாள் பயிற்சி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்து சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியை துவக்கி வைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா
இளைஞர் நீதி சட்டத்தை பற்றியும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் தெளிவாக விளக்கினார்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஜேம்ஸ் அதிசய ராஜா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்
வழக்கறிஞர் ரூபன் கிஷோர் இளைஞர் நீதி சட்டம் 2015 இல் கூறப்பட்டுள்ள ஷரத்துக்கள் பற்றி விளக்கி கூறினார்
வழக்கறிஞர் சுபாஷினி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ல் கூறப்பட்டுள்ளவை பற்றி விளக்கி கூறினார்
மனநல மருத்துவர் சிவசைலம் குழந்தைகள் மனநிலை குறித்து விளக்கி பேசினார்
இளைஞர் நீதிக்குழு நடைமுறைகள் குறித்து நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் பயிற்சி அளித்தார்
குழந்தைகளை கையாளும் விதம் குறித்து ஜான் மோசஸ் கிரிதரன் எடுத்துரைத்தார்
இப்பயிற்சியின் போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன் ராமு ,மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
நிருபர்- அஹமது ஜான்.
ConversionConversion EmoticonEmoticon