True

மனிதநேய வார விழா 2020, காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது...

தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையின் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் கொண்டப்பட்டு அந்த கிராமத்திள்ள அனைத்து மனிதர்கள் இடத்திலும்மனித நேயம் மற்றும் சமத்துவத்தையும் பேணி போற்றி பாதுகாக்கும் விதமாகவும் அந்த கிராம வளர்ச்சிக்கு மாநில அரசின் சார்பாக நிதி உதவி வழங்கி பாராட்டப்பட்டு நினைவுப்பரிசு வழங்குவது  வழக்கம் அந்த வகையில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் ராசிங்கராபுரம் கிராமத்தில், மனிதநேய வார விழா 2020, காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமிதலைமையில், மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், சாதி, மத ஒற்றுமை, மனித நேயம், சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள்,  காவலன் அப்ளிகேசன் பற்றி, தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சாந்தி, தேனி  மாவட்ட விழிப்புணர்வுப் பணிக்  கமிட்டி உறுப்பினர்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்ற  சிறப்பு அரசு வழக்கறிஞர் தங்கத்துரை, போடிநாயக்கனூர் புறநகர் காவல் ஆய்வாளர் தர்மர், ஏ.எச்.எம். டிரஸ்ட் மேலாண்மை இயக்குநர் முகமது ஷேக் இப்ராகிம், ராசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவி சீனியம்மாள் பொன்னம்பலம், சிறப்பு ஆய்வாளர் ரகு  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். விழிப்புணர்வுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பொது மக்களும், பத்திரிக்கையாளர்களும், வருகை தந்து, விழாவினை சிறப்பித்தனர்.

விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் உள்ளிட்ட  காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.  விழாவின் முடிவில்  காவல் ஆய்வாளர் தர்மர் நன்றியுரை ஆற்றினார். 


Previous
Next Post »