*மருத்துவம், கல்வி, சுற்றுலா, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வெளிமாவட்டம் சென்றவர் - சொந்த ஊர்களுக்கு திரும்ப, அரசு இணையதளத்தில் - கூடுதல் பிரிவு இணைப்பு!*
அன்புடையீர்,
_இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!_
*கொரோனா வைரஸ் தாக்கம்* காரணமாக நாடு முழுவதும் *ஊரடங்கு* அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் - போக்குவரத்தை கட்டுப்படுத்த - *வாகன அனுமதி சீட்டு (VEHICLE ePASS)* வழங்கும் முறையை - அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
2-5-2020 முதல் - தமிழ்நாடு முழுவதும் பொருந்தக்கூடிய புதிய இணையதளத்தை *அவசர கால வாகன அனுமதி சீட்டு* பெற - அரசு அறிவித்துள்ளது.
இந்த இணையதளம் மூலம் - *குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள்* விண்ணப்பிக்கலாம்.
மேலும் *திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம்* ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம் என துவக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது - கூடுதலாக, வெளிமாவட்டங்களில் உள்ள *மருத்துவம் பெற வந்து சொந்த ஊர் திரும்ப முடியாதவர்கள், யாத்திரிகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பிறர்* என்ற பிரிவுகள் கீழும் அந்த சிறப்பு இணையதளம் விண்ணப்பம் பெற துவங்கியுள்ளது.
இணையதளம் முகவரி கீழே:
https://tnepass.tnega.org/#/user/pass
இவண்,
_நிர்வாகிகள்,_ *மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).* [அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
ConversionConversion EmoticonEmoticon