True

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற

*தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் காரணமாக சிக்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட நபர்கள் உடனடியாக தங்கள் விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்!*

அன்புடையீர்,

_இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!_

தூத்துக்குடி மாவட்டத்தில் *கொரோனா நோய் தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவு* நடவடிக்கையின் காரணமாக சிக்கியுள்ள *வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், நோயாளிகள், வியாபாரிகள் மற்றும் உறவினர்கள்* உள்ளிட்ட நபர்கள் உடனடியாக தங்கள் விபரங்களை 

_தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டங்களை சேர்ந்தோர்_ *0461 - 2340012* என்ற தொலைபேசி எண்ணிலும், 

_திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஏரல் வட்டங்களை சேர்ந்தோர்_ *04639 - 245165* என்ற தொலைபேசி எண்ணிலும், 

_கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் மற்றும் கயத்தாறு வட்டங்களை சேர்ந்தோர்_ *04632 - 220258* என்ற தொலைபேசி எண்ணிலும் 

தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், *மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை -  9384056221* என்ற அலைபேசி எண்ணிலும் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தியாக (MESSAGE) தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே _ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் காரணமாக சிக்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது விபரங்களை தங்களது வட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ உடனடியாக தெரிவிக்க வேண்டும்_ என *மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.,* அவர்கள் தெரிவித்துள்ளார். 

இவண்,

_நிர்வாகிகள்,_ *மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA).* [அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
-----------------------------------
*நடப்பது என்ன?* - செயலியினை (MOBILE APP) இதுவரை நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லையா? கீழுள்ள இணைப்புகள் மூலம் - பதிவிறக்கம் செய்யவும்.
Previous
Next Post »