True

காதல் ரோமியோ காசி நீதிமன்றத்தில் ஆஜர்..! அவசர விசாரணையில் பற்றிக்கொண்ட பரபரப்புr

தமிழகத்தில் தொடரும் ரேப்பிஸ்ட்கள் ...

காதல் ரோமியோ காசி நீதிமன்றத்தில் ஆஜர்..! அவசர விசாரணையில் பற்றிக்கொண்ட பரபரப்பு

சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
காதல் ரோமியோ காசிகாதல் ரோமியோ காசி

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம் இளம் பெண்களிடம் காதலிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற வாலிபர் மீது சென்னை பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே காசி மீது நாகர்கோவிலை சேர்ந்த மேலும் ஒரு பெண் புகார் கொடுத்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி காசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, காசி மீது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். காசியால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்த நிலையில் காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவிலில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் இதற்காக நெல்லை சிறையில் இருந்து காசியை பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். நான்கு பெண்கள் மட்டுமில்லாது, காசியால் பல பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.
பொள்ளாச்சி வழக்கே முடியாத நிலையில், குமரியில் ஆரம்பித்த தலைவலி...
காசி கைதாகியிருப்பதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், காசியிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வரலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இது போன்ற சம்பவங்களில் பெருபாலும் தண்டனை வழங்குவதில் பெரும் சவலாக உள்ளது காரணம் இதுபோன்ற பெண்கள் சம்பந்தபட்ட நிகழ்வாக இருப்பதால் பெணகள் தனது எதிர்காலததையும் சமுகம் இதுபோண்ற நிகழ்களில் எப்படி பார்க்கிறது என்ற கோனத்தில் சிந்திப்பதால் அவர்கள தானாக முன்வந்து புகார்கொடுக்க முன்வருவதில்லை அப்படியே வந்தாலும் நீதிமன்றம் ஊடகங்கள் போன்ற நிகழ்வுகளால் முடங்கி விடுகிறார்கள் இதை காசி போன்ற காம ஆசாமிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கிறார்கள் இதுபோன்ற காசிக்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்குத்தான் செய்கிறார்கள் விரைவில் வெளிவரும் உண்மைகள் பெண்கள் விழிப்புணர்வு டன்  இருப்பது மட்டுமே அவர்களை பாதுகாக்கும் எனபதே உளவியல் மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கி
Previous
Next Post »